Sunday 15 March 2015

பிஹெச்டி ஃபார் ஆபீஸ் அப்ஜெக்ஷன்ஸ்

யுவர் ஹைகோர்ட் ஸ்டாஃப் மஸ்ட் பி கிவன் பிஹெச்டி ஃபார் தெர் ஆபீஸ் அப்ஜெக்ஷன்ஸ்என்றார் நீதிபதி பி கே மிஸ்ரா ஒருமுறை என்னிடம்.

இரு வாரங்களுக்கு முன்னர் என்னுடைய கிரிமினல் அப்பீல் விசாரணைக்கு வந்த பொழுது, ரிவிஷன் அல்லவா போட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். நீதிபதியே மாற்றியிருக்க முடியுமென்றாலும், வழக்கு ரீச் ஆகவில்லை என்பதால் தனியே அதற்கு மனுப்போடுவதாக கூறி தாக்கலும் செய்தாகிவிட்டது.

ஒரு வாரமாகியும் மனு நம்பர் ஆகவில்லையே என்று கேட்டால், ‘சார், அபிடவிட் ரொம்ப சின்னதாக இருக்கு. பெருசா எழுதிட்டு வாங்கன்னு சொல்றாரு சார்ங்கிறார் என்னுடைய க்ளார்க்.

எனக்கு கோபம் வரவில்லை. ஏனெனில் பழைய விசயம் ஒன்று நாபகத்துக்கு வந்தது. அவரை நீதிமன்ற சூழலுக்கு புதிதான இளம் வழக்குரைஞர்களாகிய நாங்கள்சிவில் டெகாயிட்என்போம். மனைவிக்காக கணவரிடம் இருந்துஜுடீசியல் செப்பரேஷன்கேட்டு மனு.

ஏன் இன்னும் பாஸ் ஆகவில்லைஎன்று சீனியர் கேட்டதன் பேரில், சிவில் டெகாயிட்டைப் பார்க்கப் போனேன். டேபிளில் தனியே வைத்திருந்த மனுவை என் முன் விரித்து, ‘இதில்க்ரூயல்டியே இல்லையேஎன்றார்.

சீனியரிடம் போய்ச் சொன்னால், ‘அதுக்காக அவனைக் கூட்டிட்டு வந்து இன்னும் ரெண்டு அடி அடின்னா சொல்ல முடியும்என்றார் கோபமாக.

அதற்குள் விஷயமறிந்த இன்னொரு ஜூனியர், ‘சார் அந்தக் க்ளையண்டை அவனுக்கு தெரியும். உங்க சார் ரெண்டாயிரம் ரூபா பீஸ் வாங்கியிருக்காரு. எனக்கு கொஞ்சம் கூட கொடுக்கச் சொல்லுங்கன்னு கேக்குறாருஎன்றார். க்ரூயல்டி பிரச்னை முடிவுக்கு வந்தது.

நேற்று நீதிபதி சிவஞானம் பெஞ்சில் ஒரு ரிட் அட்மிஷனுக்கு இருந்த போது நடந்தது சூப்பர்!

ட்ராபிக் ராமசாமியின் வழக்குரைஞர் லஞ்ச் மோஷனுக்கு மென்ஷன் செய்தார். ‘அதான் ஃசீப் பெஞ்சில் மூவ் செய்தீர்களேஎன்றார் நீதிபதி.

அவர் இங்கே மூவ் செய்யக் கூறினார்


சரி அதற்கு என்ன?’

அது டிவிஷன் பெஞ்ச் என்பதால் இரண்டு செட் பேப்பர்ஸ் பைல் செய்தோம். இப்போது சிங்கிள் ஜட்ஜ் முன் இரண்டு செட் பேப்பர்ஸ் தாக்கல் செய்யக் கூடாது என்று அப்ஜெக்ட் செய்கிறார்கள்


ஜட்ஜெஸ் டு லிவ் லைக் அன் அஸெட்டிக்னு சொல்வாங்க. நீதிபதி சிவஞானம் அந்த நிலையை அடைஞ்சுட்டார்னு நினைக்கிறேன். எந்த ரியாக்ஷனும் காட்டாமல், ‘அத லிஸ்ட் பண்ண சொல்லுங்கன்னார்.

மதுரை
14/03/15

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....