Sunday 28 February 2016

அந்த இன்னொரு கிணறு!




அது ஒரு வெப்பமிகுந்த மத்தியான வேளை.

மேற்கு மாம்பலத்தில் புதிதாக ஃப்ளாட் கட்டியிருந்த பில்டருக்கும், ஆசை ஆசையாக ஃப்ளாட்களை வாங்கியவர்களுக்கும் இடையே பல பிரச்னைகள். பில்டர் எங்களது கட்சிக்காரர் மற்றும் எனது நண்பர். பரஸ்பர நோட்டீஸ்கள் முடிந்து, அடுத்து கன்ஸூமர் கோர்ட்தான் என்ற நிலையில், சில ஃப்ளாட் உரிமையாளர்கள் சீனியர் மீது நம்பிக்கை வைத்து எங்கள் அலுவலகத்திற்கே வந்து விட்டார்கள்.

தொண்ணூறுகளில் சில புத்திசாலி மெட்ராஸ் பில்டர்கள் இடத்துக்கு அட்வான்ஸ் கொடுத்த கையோடு, ப்ளாட்களையும் புக் செய்து வெறும் ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் முதலீட்டில் ப்ராஜக்டை கம்ப்ளீட் செய்து விடுவார்கள்.

நம்மவரும் அப்படிப்பட்டவர்தாம்.

புகார் பட்டியல் கொஞ்சம் நீளமாக இருந்ததாலும், அந்தப் பக்கம் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகம் இருந்ததாலும், சீனியர் என்னை நடுவராக்கி விட்டு தான் பார்வையாளராக ஒதுங்கிக் கொண்டார்.

மராத்தான் செஷன். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காரசாரமாக ஆதங்கங்கள் தொடர்ந்து கொட்டப்பட்டதில் அறை மேலும் வெப்பமடைந்திருந்ததில் எந்நேரமும் பேச்சு வார்த்தை முறியும் சூழல்.

அக்ரிமெண்ட்படி கிணறு வெட்டணுமா இல்லையா?’ அடுத்த பிரச்னைக்கு தாவினார் எரிச்சலில் ஒருவர்.

ஆமாம்

கிணறு தோண்டினீங்களா?’

ஆமாம். ஒரு கிணறு

ஏற்கனவே ஒரு கிணறு இருந்தது இல்லையா?’

ஆமாம்

அப்ப எத்தனை கிணறு இருக்கணும்

ரெண்டு

இப்ப எத்தனை கிணறு இருக்குஇதுவரை சாதாரணமாக போய்க் கொண்டிருந்ததில் திடீரென என்னையறியாமல் ஏதோ சுவராசியமாக உணர்ந்தேன்.

ஒன்னுகட்டிட பிளானுக்கு இடைஞ்சலாக இருந்த பழைய கிணற்றை ஏற்கனவே மூடி விட்டிருந்தார் நண்பர்.

அடுத்த கேள்வி என்னவாக இருக்கப் போகிறது என்பதை தன்னிச்சையாக நான் யூகித்த அதே நொடியில் அந்தக் கேள்வியை அவர் கேட்டே விட்டார், ‘அப்ப அந்த இன்னொரு கிணறு எங்கே?’

கேட்கப்பட்ட கேள்வி, தமிழகத்தின் புகழ்மிக்க கேள்விகளில் ஒன்று என்று உச்சகட்ட கோபதிலிருந்த அவர் உணராததைப் போலவே பதட்டலிருந்த நண்பரும் அறியவில்லை. சொல்லி வைத்தது மாதிரி அப்பாவித்தனமாக,

அந்த இன்னொரு கிணறுதாங்க இது

கேள்வி கேட்டவர் உட்பட அனைவரும் சிரிக்க, சீனியர் இருக்கையிலிருந்து எழுந்து, ‘டேய் போய் டீ சொல்லிட்டு வாடாஎன்றார்.


நம்பமாட்டீர்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து விட்டது. எனது வழக்குரைஞர் அனுபவத்தில் ஒரே சிட்டிங்கில் சமரசம் ஏற்ப்பட்டது இந்த ஒரு முறைதான்.

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....