Showing posts with label Tamil Film. Show all posts
Showing posts with label Tamil Film. Show all posts

Wednesday, 23 March 2016

காதலும் கடந்து போகும் (தமிழ்)

கா போ…. அல்லது கா போவா? எதுவாயினும், படத்துக்கான உண்மையான தலைப்பாகியகாதலும் கடந்து போகும்என்பதோடு ஒத்து வரவில்லை. தலைப்புகள்தான் ஒத்து வரவில்லை, திரைக்கதையாவது இரண்டில் ஏதாவது ஒரு தலைப்போடு ஒத்து வருமா என்றால் அதுவும் இல்லை.

படத்தில் இருப்பது காதலா, நட்பா இல்லை வேறு ஏதாவதா என்று முடிவாவதற்குள் படம் முடிந்து விடுகிறது. அந்த ஏதாவது ஒன்றும் நாயகன் நாயகிக்கு எங்கும் கடந்து போகவும் இல்லை. கசந்து போகவும் இல்லை.

ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல் பார்த்தால் நமக்கும் இந்தப் படம் கசக்காது. நன்றாகக் கழிந்த சனிக்கிழமை இரவு என்றுதான் தோன்றும். அதற்கு காரணம் இயக்குஞர் நலன் குமாரசாமியா, நாயகன் விஜய் சேதுபதியா இல்லை காதாநாயகி மடோனா உட்பட படத்தில் ஃப்ரஷ்ஷாக அதே சமயம் இயல்பாக வரும் மற்றவர்களா என்பதும் ஆராய்ச்சிக்குறிய கேள்விதான்.

விஜய் சேதுபதி நல்ல உடம்பெல்லாம் போட்டு சட்டை பட்டன்கள் பிதுங்குமளவிற்கு புஷ்டியாக இருப்பதைப் பார்த்து சந்தோஷமாக இருந்தது. தசைகளை முறுக்குவதும், படத்தின் கதாநாயகி உட்பட அனைவரையும் எடுத்தெறிந்து பஞ்ச்பேசுவதும் மட்டுமே கதாநாயக வேலை என்றிருக்கும்மாஸ்குப்பைகளுடன் இவரும் சேர தற்போது வாய்ப்பில்லை என்ற நிம்மதிதான் காரணம்.

சமுத்திரகனிதான் தெரிந்த முகம். கொஞ்சமாக வந்தாலும்என்ன கதிர் சூப் சாப்பிடுகிறாயா?’ என்று கேட்டவாறு எழுந்து வரும் முதல் காட்சியில் விஜய் சேதுபதியோடு நம் தண்டுவடத்தையும் சில்லிட வைக்கிறார். குரல் வளத்திற்கானஆடிஷன்தேர்வை சற்றுடேப்பை இழுத்துப் பிடித்து வைத்தால், தமிழில் ஒரு சிலர்தான் தேறுவார்கள். அவர்களில் சமுத்திரகனியும் ஒருவராயிருப்பார்.

நகைச்சுவைப் படமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், 'மலையாள நகைச்சுவையே நகைச்சுவை' என்ற ஜெயமோகத்தன்மை இருப்பின் சிரிக்காமலேயே ஆனால் படம் முழுக்க இழையோடும் சுவையை சற்றுக் கூடுதலாக ரசிக்கலாம்.

படத்தின் இறுதிக் காட்சியில் காருக்கு இந்தப் பக்கம் தோன்றிமேடம் கேஷா, கார்டா?’ என்று கேட்கும் விஜய் சேதுபதியைப் பார்த்து ஆச்சரியத்தில் செய்வதறியாது திகைத்துப் போய் புன்னகைக்கிறார் மடோனா!

அப்படியே மகிழ்ச்சியில் கண்களை மூடி தலையை லேசாக குலுக்கி மீண்டும் பார்க்கையில் அங்கு நிற்பது ஏற்கனவே பெட்ரோல் போட்ட பையன். அமைதியாக பணத்தைக் கொடுத்து விட்டு விழியோரத்தில் துளிர்த்த கண்ணீரை துடைத்தவாறு காரை கிளப்பிச் செல்கிறார் என்றிருந்தால் கவித்துவமாயிருக்காது நலன்என்று கேட்டேன்.


இல்லை, அப்படியிருந்திருந்தால் உங்களைப் போன்ற அப்பாக்களை படத்துக்கு கூட்டி வந்த மகள்களுக்குப் பிடித்திருக்காது பிரபு' என்று பதில் வந்தது

Saturday, 12 March 2016

விசாரணை (தமிழ்)

அமைப்புகளை இயங்க விடுங்கள்

நீதிபதி கர்ணன் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று நண்பரும் சக வழக்குரைஞருமாகிய லஜபதிராய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. லஜபதிராயின் மூத்த வழக்குரைஞர் தனது வாதத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, தலைமை நீதிபதி அவரை நிறுத்தி சில சமாதான வார்த்தைகளைக் கூறி வழக்கினை வாபஸ் வாங்க வைத்தார். அப்போது அவர் கூறியதுதான், “One may not approve of all that he does, but let the system work.”

தமிழகம் முழுவதும் தலையில் வைத்துக் கொண்டாடப்பட்ட வெற்றிமாறனின்விசாரணைதிரைப்படத்தில்ஸிஸ்டம்எப்படியாவது இயங்க வேண்டியதன் அவசியம் மூன்று இடங்களில் சொல்லப்படுவதைக் கேட்கையில், என்னை தலைமை நீதிபதியின் வார்த்தைகள் மேலும் சில்லிட வைத்தது.

மற்றபடி, வெறும் பூச்சியத்தைச் சுற்றி திறமையாக ஒரு திரைக்கதையை கமல்ஹாசனின் பாபநாசம் படம் உருவாகியது போலவே, ஆர் எஸ் மனோகர் காலத்து சாதாரண கேங்ஸ்டர் படக்கதையை உல்டாவாக்கி இரண்டாம் பகுதியில் கண்கட்டு வித்தை காட்டியதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குஞர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

அமைப்புகளைப் பற்றி பேசும் படம் முதல் பாதியிலேயே முடிந்து விடுகிறது. அடுத்த பகுதிஒரு கொலை நடைபெற்றதை தற்செயலாகக் கேட்க நேரிடும் அப்பாவிகள்துரத்தி வேட்டையாடப்படும் ஹைதர் காலத்துக் கதை. இதில் ஸிஸ்டம் எங்கு இருக்கிறது என்பது புரியவில்லை.

மரணதண்டனைக் கைதியை அப்பாவியாகக் காட்டிய கமல்ஹாசனின்விருமாண்டிகூடமரணதண்டனை எதிப்புபடமாக விவாதிக்கப்பட்ட தமிழ்ச்சூழலில்அப்பாவிகளை துரத்திச் சென்று போட்டுத்தள்ளும்கொலையாளிகளைப் பற்றிய படம்போலி மோதல் சாவு’ (fake encounters) பற்றிய படமாக கொண்டாடப்படுவதில் வியப்பில்லைதான்.

விசாரணை அமைப்புகள் இயங்குவது பற்றிய படமும் நிச்சயமாக இல்லை. தினமும் கண்முன் நிகழும் நூற்றுக் கணக்கான மரணங்களின் விளைவால் மரத்துப் போன மனிதத்தை விளக்கசுடப்படுவதற்காக முன்னே ஒரு மனிதன் காத்திருக்கிறான் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல், இயங்காமல் போன துப்பாக்கியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படக்காட்சியின் தாக்கத்தாலோ என்னவோ, காவலர்கள் ரொம்ப சாவகாசமாக பேசிக் கொண்டே கூட்டணி அமைத்து மூன்று அப்பாவிகளை வேட்டையாடுகிறார்கள்.

ஆந்திர நீதிமன்றத்தில் தானாக வந்து சரண்டராகும் நபர் நீதிமன்ற காவலில் (judicial custody) இருந்து கடத்தப்பட்டு சென்னை வீட்டில் பிணமாகத் தொங்குகிறார். அவர் மீது தமிழகத்தில் வாரண்ட் நிலுவையில் உள்ளதால், அவரைக் கைது செய்ய வந்துள்ளதாக சென்னைக் காவலர் ஆந்திர நீதிபதியிடம் அதிகாரபூர்வமாகவே கூறுகிறார். அதே நாளில் அதே நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் நபர்கள் சென்னையில் காவலர்களால் என்கவுண்டர் செய்யப்படுகின்றனர். விடுவிக்கப்படும் நால்வரின் ஒருவர் தப்பித்துள்ளார். அந்த எஸ்பிக்கும் ஏஎஸ்பிக்கும் மற்றவர்களுக்கும் குஜராத் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் வகையறாக்களின் முடிவு நிச்சயம்.

கடைசியில் எல்லாம் முடிந்த பின்னர், முத்துவேலின் குடும்ப போட்டோ, டிவி டிபேட் என்று எஸ்பியிடம் மற்றொரு காவலர் பேசுவது போல செயற்கையாக நம்மிடம் விளக்கமாக பேசும் எம்ஜிஆர் பட உத்தியை கைவிடாத வரைஉலகப்படம்என்றெல்லாம் என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

மொத்தத்தின் நான் பயந்த மாதிரி விசாரணை, ‘அதிரவைக்கவில்லை.


PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....