Tuesday 24 March 2015

தி ப்ரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட்/ எக்ஸோடஸ் காட்ஸ் அண்ட் கிங்ஸ்

ஜியாஃப்ரே கட்டன்பெர்க்’கும் அவரது டிஸ்னி குழுமமும் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய அறிஞர்களை, மோசஸ் பிரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட் (1998) திரைக்கதையின் உண்மைத்தன்மைக்காக ஆலோசித்தார்களாம். ஆனால், மகாபாரத கர்ணன் – துரியோதனன் நட்பினைப் பற்றி அறிந்திருந்தார்களா என்பது தெரியவில்லை. 

மோசே பற்றி எத்தனையோ படங்கள் எடுக்கப்பட்டிருப்பினும், இந்த ஒரு படத்தில்தான் மோசே – ராமஸீஸ்’ நட்பானது பைபிளில் அது பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்றாலும் உணர்வுபூர்வமாக திரைக்கதையாக்கப்பட்டிருக்கும்.  ராமசீஸ்’ஸின் பாத்திரமும், பார்வையாளர்களது அனுதாபத்தை அள்ளிச் செல்வதாகவும் சொல்லப்பட்டிருக்கும். கர்ணன் மோசே இருவரின் மனப்போராட்டங்களுக்கும் ஒன்றுதான் என்றாலும் கர்ணன் துரியோதனன் நட்பு நமது மரபுவழி அறநெறி சார்ந்தது. 

ஹாலிவுட்’ அறிந்தோ அறியாமலோ இப்படத்தில் அதை உள்வாங்கியிருக்கும்...

ஆனால், தற்பொழுது வெளிவந்துள்ள ரிட்லி ஸ்காட்டின் எக்ஸ்டோடஸ் தொழில்நுட்பத்திலும், திரையாக்கத்திலும் டிஸ்னியின் கார்ட்டூனை விட பல மடங்கு பெரிதாயினும், பதினைந்து ஆண்டுகளாயினும் இன்னமும் நம் மனதில்  உறைந்து போன பிரின்ஸ் ஆப் ஈஜிப்ட்’டின் உணர்வுகளையும் உறவுகளையும் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. படம் முடிந்து வெளியே வருகையில் பத்தோடு பதினைந்து அதில் இதுவும் ஒரு படம் என்ற உணர்வுதான் மிஞ்சுகிறது. மீண்டும் பார்வோனை வில்லனாக சித்தரிக்க முனையும் இப்படம் எகிப்தில் தடை செய்யப்பட்டிருப்பதில் வியப்பில்லை.

1956ல் வெளிவந்த ‘டென் கமாண்ட்மெண்ட்ஸ்’ பற்றியும், செங்கடல் பிளக்கும் அதன் உச்சகட்ட காட்சி பற்றியும் என் அம்மா பிரமிப்புடன் கூறக் கேட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. 1998க்கு முன்பும் பின்னும் எத்தனையோ படங்கள் வந்திருக்கலாம். ஆனால் பிரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட்’ நம் மனதில் ஏற்ப்படுத்திய தாக்கத்தினை எந்தப் படமும் ஏற்ப்படுத்தப் போவதில்லை. அதற்கு பலர் நினைப்பது போல அப்படத்தின் பாடல்கள் முக்கிய காரணமல்ல.

மாறாக, ஆழமான நட்பு முன்னிறுத்தப்பட்டதேயாகும்...

மதுரை
22/03/15

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....