Thursday 19 May 2016

இனி, 2016 தேர்தலுக்குப் பின்...


இனி

கலைஞர் இலக்கியம் அவ்வபோது அறிக்கை என்று ஒதுங்கி விடுவார்

ஸ்டாலின் கலைஞருக்குப் பின் விஜயகாந்த் தன்னை முந்திவிடுவாரோ என்ற அச்சமின்றி திமுக தலைமையை கைப்பற்றுவார். மக்களின் அனுதாபத்தைப் பெற்று அடுத்த தேர்தலை சந்திக்க முயல்வார்.

கனிமொழி 2ஜி தீர்ப்புக்கு பின் ஒதுக்கப்படுவார்.

அன்புமணியை பாமகவின் சாதீயக் கட்டு திண்டிவனத்தைச் சுற்றியே கட்டிப் போடும்

திருமா ஸ்டாலினுடன் நெருங்குவார்

வைகோ டாஸ்மாக்கை மூடு என்று நடைப்பயிற்றி செய்து தொண்டர்கள் இல்லாமலேயே அரசியலில் தன்னுடைய இடத்தையும் உடல்நலத்தையும் தக்க வைத்துக் கொள்வார்

கம்யூனிஸ்ட்கள் அம்மாவுக்கு சாதகமாக சாதுர்யமாக காய்களை நகர்த்திய வண்ணம் அவ்வப்போது அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருப்பார்கள். அல்லது பிஜேபியுடன் அம்மா உறவு கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி திமுக பக்கம் சாய்வார்கள்.

சீமான் அவருடைய தொண்டர்களுக்கு 40 வயது தாண்டும் வரை இதே போல முஷ்டியை மடக்கி பேசிக் கொண்டிருப்பார். இனியும் சிறைப்படாமல் பார்த்துக் கொள்வார்.

பாஜக பாராளுமன்ற தேர்தல் வரை அம்மாவை கோபப்படுத்தாமல் இருப்பதில் அவஸ்தையாக உணர்வார்கள்.

வாசன் காங்கிரஸோடு இணைய பேரம் பேசலாம். மற்றவர்கள் இணைந்து விடுவார்கள்

காங்கிரஸ் மரியாதை சற்றுக் குறைந்தாலும் திமுக பக்கமே இருக்கும். சிதம்பரம் இளங்கோவன் இடத்தைப் பிடிக்க தொடர்ந்து முயன்று வெற்றி பெறுவார்.

சரத்குமார், பழ.நெடுமாறன் ஆகியோர் தங்களுக்கு இல்லாத செல்வாக்கை மேலும் இழப்பார்கள்

அம்மா இப்போதே நன்றாகத்தானே இருக்கிறது என்று எப்போதும் போல இருப்பார். ஸ்டாலினை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார். மாறாக அவரது அச்சமும் கவனமும் சசிகலா குடும்பத்தினர் மீது இருக்கும்.

மக இக தொடர்ந்து தேர்தல் பாதை திருடர் பாதை என்று வினவு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும்.

ஊடக சமூக ஆர்வலர்கள் மநகூவை கைவிட்டு ஆம் ஆத்மி/ சகாயம் என்று ஆரம்பிப்பார்கள். ஒருவேளை கேஜ்ரிவால் டெல்லியில் செய்தது போல அடிமட்டம் வரை இறங்கி வேலை செய்யும் தொண்டர்கள் கிடைத்தால் வளரலாம். ஆனால், வாய்ப்பு இல்லை.

நம்போல பேஸ்புக் வீரர்களுக்குத்தான் கஷ்டம். கடந்த நாலுவருடமாக போட்ட ஸ்டேடஸ்களின் கண்டெண்டை மாற்ற முடியாமல் இன்னமும் நாலு வருடத்திற்கு போரடித்தாலும் தொடர வேண்டும்.

சட்டசபையில் கலவரம் வரலாம்

விஜயகாந்த்?


அட நானும் மறந்து விட்டேனே. அவரது உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக பணியாற்ற தடையாக இருக்கும். ஆட்சியில் இல்லாத ஜெயலலிதா போல ஓய்வில் இருப்பார். பிரேமலதா தலைமையில் கட்சி கரைந்து போகலாம்.

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....