Wednesday, 4 May 2016

தி கிராஸர்ஸ் சன் (பிரஞ்சு) 2007

‘மே ஐ ஹெல்ப் யூ’ என்பதற்கும் ‘வாட் டு யு வாண்ட்’ என்பதற்கும் வித்தியாசம் உண்டா?

உண்டு. அதுவும் பல நூறு கோடி சொத்து சேதமும் போதாதற்கு  சில உயிர்களைப் பலி வாங்கக் கூடிய அளவிலும் அந்த வித்தியாசம் இருப்பதாக கலிபோர்னியாவில் 1992ல் நடைபெற்ற கலவரம் நிரூபித்தது.

கலவரம் தொடங்கியதற்கு காரணம் என்னவோ, ரோட்னி கிங் என்ற ஆப்ரிக்க-அமெரிக்கரை அடித்துத் துவைத்த காவலர்களை ‘குற்றமற்றவர்கள்’ என்று விடுவித்த நீதிமன்ற தீர்ப்புதான்; என்றாலும், விரைவிலேயே கலவரக்காரர்களின் இலக்கு ஆசியர்கள், குறிப்பாக கொரியர்கள் நடத்தி வந்த கடைகளை நோக்கித் திரும்பி  அவர்களது கடைகள் சூறையாடப்பட்டன.

ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்கு அப்படி என்ன கொரியர்கள் மீதான கோபம் என்பதை ஆராய்ந்ததில், புலம் பெயர்ந்து வேற்று இனத்தாரோடு வாழ வேண்டிய பாதுகாப்பற்ற மன நிலையில் ‘பொருளீட்டுவது’ என்ற ஒற்றைப் பார்வையில் மட்டுமே தமது வாழ்க்கையை அமைத்துக் இனம் ஒன்றின் மீது உலகின் எந்தப் பகுதியிலும் எழும் பொறாமை உணர்வுதான் என்றும் அறியப்பட்டது.

வழக்கமாக பலசரக்கு கடை ஒன்றில் நுழையும் அமெரிக்கர் எதிர்பார்ப்பது, ‘மே ஐ ஹெல்ப் யூ’ என்ற வரவேற்பு. அவ்வாறில்லாமல் கொரியர்கள் நடத்தும் கடையில் நுழைந்தவுடன் ‘வாட் டு யு வாண்ட்’ என்று வினவப்பட்டதிலேயே கலவரத்திற்கான முதல் சுழி போடப்பட்டதாம்.

முன்பு எல்லாம் சாமான்கள் வாங்கிய பிறகு நீட்டும் கையில் போடப்படும் ‘போடு கருப்பட்டியிலிருந்து’ தற்போது கட்டிக் கொடுக்கப்படும் பொருட்களோடு ‘மகளுக்கு கல்யாணம் வச்சுருக்கேன்’ என்று கார்டையும் நீட்டும் கடைக்காரர்களுக்கும் நமக்குமான தொடர்பு அலாதியானது.

ரிலையன்ஸும் நீல்கிரீஸும் வரும் காலங்களில் அந்த தொடர்பை முற்றிலும் அழித்துப் போடலாம்.

ஆனால் பிள்ளைகள் வாழ்க்கையைத் தேடி நகரங்களில் குடி பெயர்ந்த பின் தனியாக கிராமங்களில் விடப்படும் வயோதிகர்களுக்கு ரிலையன்ஸும் நீல்கிரீஸும் என்ன செய்து விட முடியும். அதே கடைக்காரர்கள்தாம்.

தந்தைக்கு ஏற்ப்பட்ட திடீர் மாரடைப்பால் அவரது வியாபரத்தை பார்க்க வேண்டா வெறுப்பாக கிராமத்துக்கு வரும் அன்டோனியா மெல்ல மெல்ல எப்படி அந்த வியாபாரத்தின் நுணுக்கங்களையும் கூடவே குடும்ப உறவுகளின் அவசியத்தையும் கற்றுக் கொள்கிறான் என்பதுதான் பிரஞ்சு இயக்குஞராகிய எரிக் கிராடோ’வின் ‘தி க்ராஸர்ஸ் சன்’ என்ற படம்.

அனைவரும் அமர்ந்து பார்க்கத் தகுந்த குடும்பப் பிணைப்பையும், சமூகப் பிணைப்பையும் வலியுறுத்தும் ஃபீல் குட் படம்.

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...