Monday 10 October 2016

ரகசியங்களின் தேவை...

தமிழக முதல்வரின் உடல்நலக்குறைவு விவகாரத்தில், உண்மையிலேயே நாம் பெருமைப்படும் விஷயம் ஒன்று உண்டு என்றால், கடந்த பதினைந்து நாட்களாக அவரது செயல்திறனை பரம ரகசியமாகக் காத்து வந்த அதிகாரவர்க்கத்தின் திறமைதான்.

டிஜிட்டல் புரட்சி யுகத்தில் இது பெரிய சாதனைதான்.

பொதுவாக இம்மாதிரியான நிகழ்வுகளில் ரகசியத்தைக் காப்பதிலும் அதை உடைப்பதிலும் அதிகாரிகளுக்கும் பத்திரிக்கையாளர்களுக்குமிடையே பெரும் போட்டியே நடக்கும். இந்த முறை போட்டியில் வெற்றி அதிகாரிகள் பக்கம்தான்.

பத்திரிக்கையாளர்கள் போட்டியிட தைரியம் கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்.

நேற்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை மூலம் நிலைமை ஓரளவிற்கு தெளிவடைந்த நிலையில், தமிழக, தேசிய அரசியல்வாதிகள் மற்ற தொழிலதிபர்கள் ஏன் அதிகாரிகளும் தங்களது காய்களை இனி நகர்த்த ஆரம்பிப்பார்கள்.

தலைவர்களின் உடல்நலன் பற்றிய செய்திகள் சமயங்களில் வரலாற்றின் போக்கினை மாற்றி விடுவ்துண்டு.

அவ்வாறு மிக மிக ரகசியமாக வைக்கப்பட்ட உடல்நிலை அறிக்கை ஒன்று வெளியே கசிந்திருந்தால், இந்தியாவின் வரலாறு மாறியிருக்கும் என்கிறார் டொமினிக் லாப்ரீ தனது ஃபீரிடம் அட் மிட்நைட் புத்தகத்தில்.

முகமது அலி ஜின்னா!

ஜூன் 1946ல் ஜின்னாவிற்கு கடுமையான காசநோய் என்பதைக் கண்டறிகிறார் அவரது மருத்துவர் ஜே..எல்.பட்டேல். அரசியல் எதிரிகளாக அவர் கருதிய காந்தி, நேருவிற்கோ அல்லது மவுண்ட்பேட்டனுக்கோ தெரியவந்தால் இந்திய விடுதலையை தனது மரணம் வரை தள்ளி வைத்து, பிரிவினையை தடுத்து விடுவார்கள் என்று ஜின்னா கருதியதால், மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டதாம் அவரது உடல்நலம் பற்றிய விபரம்.

அந்த ரகசியம் காக்கப்பட்டதால், ஜின்னா தனது கடமையை முடித்து பின்னர் ஒரே வருடத்தில் காசாநோயால் இறந்து போனார்.


தமிழகத்தில் ரகசியம் காக்கப்பட்டதில் பதினைந்து நாட்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு அவகாசம் கிடைத்துள்ளது.


No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....