Tuesday, 21 June 2016

சுவாமியின் முதல் எதிரி

ரகுராம் ராஜனை கல்லூரிதான் அவர் வீடு என்றால், அதற்கு அனுப்பியது நான்தான்என்று இனி சுப்பிரமணியன்சுவாமி பெருமைப்பட்டுக் கொள்வார். ‘இந்தியாவை அதன் பொருளாதார அழிவிலிருந்து மீட்டேன்என்று கூடச் சொல்லத் துணிவார்.

ரகுராம் ராஜனை விட சுவாமி வன்மையாக தாக்குதல் தொடுத்த பொருளாதார நிபுணர் ஒருவர் உண்டு என்றால், அது இந்திய புள்ளியியல் துறையின் தந்தை என்று கருதப்பட்ட பி.சி.மகலனோபிஸ்.

தனது எதிரிகளில் முதலாவது நபர் என்று சுவாமியால் அறிவிக்கப்பட்ட மகலனோபிஸ் பிறந்தநாளை 'தேசிய புள்ளியியல் தின'மாக அறிவித்து இந்திய அரசு கொண்டாடி வருகிறது.

பத்தொன்பது வயது மாணவனாக தான் எழுதிய கட்டுரை, மகலனோபிஸ் ஒரு அறிவுத் திருடர் (Plagiarist) என்பதை நிரூபித்து அதனால் சிதைக்கப்பட்ட அவரது சர்வதேசப் புகழிலிருந்து அவர் மீளவே முடியவில்லைஎன்று சுவாமியால் தற்போது குறிப்பிடப்படும் மகலனோபிஸ் கல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் (Indian Statistical Institute) சுவாமி முதுகலை படிக்கையில் அதன் முதல்வராயிருந்தவர்.

மகலனோபிஸ் சுவாமியின் தந்தையின் மீது கொண்ட பகையால், சுவாமி மீது வெறுப்பை கக்கினாராம். அதனால் மற்ற பேராசிரியர்கள் சுவாமியை அனைத்து பரீட்சைகளிலும் தோல்வியுற செய்தனராம். எனவே சுவாமி, நிறுவன நூலகத்தில் அமர்ந்து மகலனோபிஸ் கட்டுரைகள் அனைத்தையும் படித்து, மகலனோபிஸ் தயாரித்த இரண்டாவது ஐந்தாண்டு திட்டம், 1930ல் பெல்ட்மான் என்ற ரசியரின் குறிப்புகளிலிருந்து திருடப்பட்டதாக அறிய வந்தாராம்.

அடுத்து மகலனோபிசுவின் அதி முக்கிய கருத்தானபிராக்டைல் அனாலிசுசு’ (Fractile Analysis) என்ற கோட்பாடு ஒன்றுக்கும் உதவாத ஒன்று என்று நவீன கணிதம் மூலம் நிரூபிக்க முடியும் என்று கண்டுபிடித்து அதனை ஒரு பத்திரிக்கையில் வரச் செய்தாராம். அக்கட்டுரையாதான் மகலனோபிசுவின் சர்வதேச புகழ் சிதைந்து போய், அதிலிருந்து அவர் மீளவே முடியவில்லை என்கிறார்.

பத்ம விபூசன் விருது உட்பட உலகின் பல்வேறு பல்கலைக்கழக விருதுகளைப் பெற்ற மகலனோபிஸை இந்தியா டுடே தனது சிறாப்பிதழ் ஒன்றில், இந்தியாவை அமைத்தவர்களான 100 நபர்களில் ஒருவராக, குறிப்பாக இந்தியாவை கட்டியவர்களில் ஒருவராக குறிப்பிடுகிறது.

இணையத்தில் காணக்கிடைக்கும் எந்த ஒரு செய்தியிலும், மகலனோபிசை சர்வதேச அளவில் ஒன்றுமில்லாமல் போகச் செய்த 19 வயது மாணவனைப் பற்றிய செய்தியோ அல்லது மகலனோபிசு ஒரு அறிவுத் திருடர் என்றோ அல்லதுதுருப்பிடித்த இடதுசாரி’ (corrupt leftist) என்றோ இல்லை.

கிடைக்கும் தகவல்களில் இருந்து மகலனோபிசை சர்வதேச அளவில் ஒன்றுமில்லாமல் போகச் செய்தேன் என்பது, சுவாமியின் சுய விளம்பர யுக்தியாகவே தெரிகிறது.

இணையத்தில் தேடியதில், சுவாமி 1963ல் எகனாமெட்ரிகோ என்ற பத்திரிக்கையில் தனது கட்டுரையினை வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் கூறியது போல அதற்கு பதிலில்லாமல் போகவில்லை. 1965ல் வேறு இரண்டு அறிஞர்கள் அதே பத்திரிக்கையில் சுவாமி குறிப்பிடும் முறை தவறு என்று மறுத்து எழுதியுள்ளனர்.

அதே போல, ‘மகலனோபிசு மாடல்எனப்படும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான அவரது கொள்கையும், பெல்ட்மானிடம் இருந்து திருடப்பட்டதாகவும் யாரும் கூறியிருப்பதாக தெரியவில்லை. அதனை ஒரு திருட்டு என்ற அளவில் அறிஞர் மட்டத்தில் ஏதும் விவாதம் நடந்ததாக தெரியவில்லை.

பெல்ட்மானின் கொள்கை, ஹாரட் என்பவரால், 1957ல் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டு பின்னர் பெல்ட்மான் - ஹாரட் - டோமர் மாடல் என்று அழைக்கப்படுகிறது. மகலனோபிசு மாடல் 1952ல் வெளியிடப்பட்டது. இரண்டும் கருத்தளவில் ஒன்றுபடுவதுதான்.

மற்ற விஞ்ஞான கண்டுபிடிப்புகளைப் போல நான் முந்தி நீ முந்தி என்று ஏதும் சர்ச்சை ஏற்ப்பட்டதாக தெரியவில்லை.

சுவாமி தான் மகலனோபிசுவை சிறுமைப்படுத்துவதாக நினைத்து, திருட்டு (plagiarism) என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். ஆனால் அவர் பெருமைப்படுவது போல, அவரது கட்டுரையோடு, மகலனோபிசு சர்வதேச அளவில் செல்லாக்காசாகிப் போனார் என்றெல்லாம் ஏதும் இல்லை.


ஒருவேளை ராஜன் சுவாமிக்கு முன்னதாக செத்துப் போனால், அவரையும்இந்தியா வல்லரசாவதற்கு எதிரான சர்வதேச சதியின் கருவிஎன்று சுப்பிரமணியன் சுவாமிநிரூபிக்கலாம்’.

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...