Friday 18 December 2015

சீக்கியர் பெளத்தர்கள் கூட அர்ச்சகர் ஆகலாமா?

2006ம் ஆண்டில் ‘அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகராகும் சட்டத்’திற்கு இடைக்கால தடை உத்தரவு வேண்டி திரு பாராசரன் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய பொழுது ‘இந்துக்கள் அனைவரும் அர்ச்சகராக முடியும் என்றால், சீக்கியர்கள் மற்றும் பெளத்தர்களும்’ கூட இந்துக் கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படும் அபாயம் உள்ளது’ என்று வாதிட்டதாக செய்தித்தாளில் படித்தேன்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25ல் ‘இந்து என்ற பதமானது சீக்கியர் மற்றும் பெளத்தர்களையும் உள்ளடக்கியது’ என்று கூறப்படும் விளக்கத்தை வைத்து இப்படி ஒரு அச்சத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அந்த விளக்கத்தை முழுமையாகப் படித்தால் அந்தந்த மத நிறுவனங்களைப் பொறுத்து அம்மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உரிமையளிக்கலாம் என்ற ரீதியில் அந்தப் பிரிவு இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

ஆனாலும் தமிழக அரசு இந்த விஷயத்தில் கவனமாகவே இருந்துள்ளது.

நமது இந்து அறநிலையத்துறை சட்டத்தின் (The Tamilnadu Hindu Religious and Charitable Endowments Act’1959) 10வது பிரிவில் ‘இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் எந்த ஒரு ஊழியரும் இந்து மதத்தினை பின்பற்றுபவர்களாக (person professing hindu religion) இருத்தல் வேண்டும் என்றுதான் உள்ளது. ‘இந்து’ என்று இல்லை.

55ம் பிரிவின்படி கோவில் ஊழியர்கள் (அச்சகர்கள்) நியமிக்கப்படுகிறார்கள். எனவே அர்ச்சகர் இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருந்தல் வேண்டும். சீக்கியரோ அல்லது பெளத்தரோ சட்டத்தின் பார்வையில் இந்துவாக இருக்கலாம். ஆனால் இந்து மதத்தினை பின்பற்றுபவர் இல்லை.

கோவில் ஊழியர்களை நியமிப்பது குறித்த விதிகளிலும் (The Tamilnadu Hindu Religious Institutions (officers and servants) Service Rules’1964 3வது விதி இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் இந்து மதத்தினை பின்பற்றுபவர் என்று எவ்வாறான உறுதி மொழி எடுக்க வேண்டும் என்பதற்கும் அரசாணை எண் 4055/1961 மூலம் விதிமுறைகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே திரு பராசரனின் அச்சம் தேவையற்றது...

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....