இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மட்டுமே 7 ஆண்டுகள் பணியாற்றியவர் Y.V.சந்திரசூட். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் சுமார் 18 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற வேண்டியிருந்தது. அதிக காலம் பணியாற்றிய மற்றொருவரான K.G.பாலகிருட்டிணன் வழக்குரைஞராக பணியாற்றத் தொடங்கியது 1968. கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது 1985. அதாவது இவரும் அதே அளவு வருடங்கள் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது.
தமிழகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கே 45 வயது நிரம்ப வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்னர், தில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து வெறும் 10 வருடம் 4 மாத அனுபவம் மட்டுமே நிரம்பிய வழக்குரைஞர் ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து பிரதம மந்திரியின் ஒப்புதலையும் கடந்து இறுதியில் அந்த வழக்குரைஞரின் பெயர் ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவரிடம் சென்றது.
குடியரசுத் தலைவருக்கு ஆச்சரியம்!
நமது அரசியலமைப்புச் சட்டம் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தகுதி 10 வருட அனுபவம் என்று கூறினாலும், அந்த குறைந்த பட்ச அனுபவத்திலேயே நீதிபதியாக பரிந்துரைக்கப்படும் அளவிற்கு அவ்வளவு திறமை வாய்ந்தவரா, இவர் என்று.
வழக்குரைஞரின் திறமைக்கு அறுதியான அளவு கோல் கிடையாது. ஆயினும் வழக்குரைஞர்களின் வருமானம் ஒரு அளவு கோல். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுபவரின் வருமான வரி கணக்கு ஒரு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படும். இந்த வழக்குரைஞரின் வருமான வரி கணக்கை ஆராய்ந்த குடியரசுத் தலைவருக்கு மேலும் அதிர்ச்சி. அந்த காலகட்டமான 1989-90 ஆண்டில் அந்த வழக்குரைஞரின் மாத வருமானம் ரூ.2000க்கும் கீழ்!
குடியரசுத் தலைவர் அந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி பிரதமருக்கே அனுப்பினார். அந்த வழக்குரைஞர் பின் எப்போதும் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அந்த குடியரசுத் தலைவர் மறைந்த R.வெங்கட்ராமன்.
வழக்குரைஞரின் பெயர் ரொக்சனா. அதே காலகட்டத்தில் இந்தியாவின் சட்ட அமைச்சராக பணியாற்றிய டாக்டர்.சுப்பிரமணிய சுவாமி அவர்களின் மனைவி.
(From 'My Presidential Years' by R.Venkatraman)
“I would’ve made a dreadful judge, and am glad I didn’t succeed” Roxana at her magnanimous best in an interview to OUTLOOK.
Tuesday, 20 October 2015
Saturday, 10 October 2015
குப்பைக் காகிதமாகும் தீர்ப்புகள்
எவ்வளவுதான் மூளையை கசக்கிக் கொண்டு படித்தாலும், கீழமை நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அப்பீல் தாக்கல் செய்வதற்கு ஒரு பாயிண்ட் கூட அகப்படவில்லையா?
கவலை வேண்டாம். அந்த தீர்ப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். அப்படியெனில் அந்த ஒரு பாயிண்ட் போதும், அதை ‘குப்பைக் காகிதம்’ என்று முழுமையாக தள்ளுபடி செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கேட்கலாம்.
தமிழில் எழுதப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக கீழமை நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினை ‘த ஜட்ஜ்மெண்ட் இன் தமிழ் இஸ் நோ ஜட்ஜ்மெண்ட் அட் ஆல், இட் ஈஸ் ஸோ மச் வேஸ்ட் பேப்பர்’ என்று நமது நீதிமன்றம் 1978ம் ஆண்டு தள்ளுபடி செய்துள்ளது. (Ramayee v. Muniyandi Konar (1978)2 MLJ 442)
தமிழில் எழுதினால்தானே, குப்பைக் காகிதம்?
அந்த கீழமை நீதிமன்ற தீர்ப்பு எழுதப்பட்ட ஆண்டு 1970. அதனால் அப்படி.
1976ல் கீழமை நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டாலும் உரிமையியல் நீதிமன்றங்களைப் பொறுத்து 01/02/82 முதல் அமல்படுத்தப்பட்டது.
உடனடியாக தமிழில் தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து பல நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை யாவும் 1994ம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டாலும், நமது உயர் நீதிமன்றம் வெளியிட்ட துறைரீதியிலான உத்தரவு மூலம் தொடர்ந்து ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் கூறப்பட்டு வந்தன.
‘ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுதலாம்’ என்ற துறைரீதியிலான உத்தரவானது சட்டத்திற்கு புறம்பானது என்று சோலை சுப்பிரமணியம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கானது முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் விரைவிலேயே அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டது தவறு என்று திரு.பொ.ரத்தினம் என்ற வழக்குரைஞர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.இராமசுப்பிரமணியம் மற்றும் வி.எம்.வேலுமணி ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் துறைரீதியிலான உத்தரவானது சட்ட விரோதமானது என்று 01/07/14 அன்று தீர்ப்பளித்துள்ளனர்.
இதனை எதிர்த்து வி.வசந்தகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்துள்ளார். ஆயினும் இடைக்காலத் தடை ஏதும் வழங்கப்படவில்லை...
எனவே சமீபகாலமாக பெருவாரியாக ஆங்கிலத்தில் எழுதப்படும் கீழமை நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் அவை 01/07/14க்கு பின் எழுதப்படின் சட்டத்திற்கு விரோதமானது.
சட்டத்திற்கு புறம்பானது என்பது மட்டுமல்ல. கீழமை நீதிமன்றங்கள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதுவது உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவமதிக்கும் செயலுமாகும்.

குற்றப்பின்னணி?
சட்டக் கல்லூரியில் அவ்வப்போது ஸ்டிரைக் நடக்கும். அப்படி ஒரு நாள் நடந்த போது, காரணத்தைக் கேட்டால் ஆளுநர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் சட்ட மாணவர் ஒருவர் பட்டம் பெற மேடை ஏறக்கூடாது என்று தடுக்கப்பட்டதாக’ கூறினர்.
அன்று காலை செய்தித் தாளில் நானும் அந்தச் செய்தியினைப் படித்திருந்தேன். அவர் கொலைக் குற்றத்திற்கான தண்டனைக் கைதி என்றதால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக.
சில வருடங்கள் கழித்து, அலுவலகத்தில் சக ஜூனியர் ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்த நண்பரை எனக்கு அறிமுகம் செய்தார்.
கோடு போட்ட முழுக்கைச் சட்டையை மிக நேர்த்தியாக கால்சாராய்க்குள் இன் செய்தபடி, உயரமான தோற்றத்திலும் வசீகரமான சிரிப்பிலும் ஏதோ கம்பெனி எக்ஸிகியூட்டிவ் போல இருந்தார்.
தனது நண்பர் ‘சட்டம் உட்பட வரலாறு, சமூகவியல், கணிதம் என்று பல்வேறு முதுகலைப் பட்டங்களைப் பெற்று தற்பொழுது தண்டனைக் கைதியாக சிறையிலிருந்தபடியே கணிதத்தில் ஆராய்ச்சி செய்து வருவதாக’க் கூறியதைக் கேட்டதும் எனக்கு சின்ன அதிர்ச்சி.
அதுவரை கொலைக் குற்றவாளி ஒருவரை அவ்வளவு அருகில் பார்த்ததில்லை.
ஆனால் அவரோ மற்ற யாரையும் போலத்தான் இருந்தார். வாஞ்சையுடன் நான் பற்றியிருந்த அவரது கைகளில் கொலைக்கான எந்த சமிக்ஞையும் இல்லை.
‘அடடே, பட்டமளிப்பு விழாவில் உங்களை அனுமதிக்கவில்லை என்று நாங்கள் ஸ்டிரைக் எல்லாம் பண்ணியிருக்கோமே’ என்றேன்
அடிக்கடி எங்களது அலுவலகம் வருவார், எப்போதும் அந்த வசீகர சிரிப்பும் உற்சாகமான பேச்சும் என்னைக் கவரும், முக்கியமாக நேர்த்தியான அவரது உடைகள். பின்னர் சாலையில் இறங்கி நடந்து செல்லும் அவரை ‘இங்கிருந்து நேராக சிறைக்கு செல்கிறார்’ என்று யாரும் நினைக்க முடியாது.
அவரது தந்தையாரும் அவருடன் சக தண்டனைக் கைதியாக இருந்தார். மிகவும் நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்த அவரை கருணை அடிப்படையில் விடுதலை செய்விக்க எனது நண்பர் பெரும் முயற்சி எடுத்து வந்தார். ‘விடுதலை பெற்ற மனிதனாக அவரை மரிக்க விடுங்கள்’ என்று நான் கூட ஆளுநருக்கு மனு ஒன்று தயாரித்துக் கொடுத்தேன்.
ஆனால், பலனின்றி சிறையிலேயே அவர் மரணமடைந்ததாக பின்னர் அறிந்தேன்.
சில மாதங்களுக்கு முன்னர் எனது அலுவலகம் வந்த கட்சிக்காரர் தன்னுடன் துணைக்கு அழைத்து வந்த ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அந்த சிரிப்பை வைத்தே கண்டுபிடித்து விட்டேன்.
மற்ற விஷயங்களைப் பேசிய பின்னர் தனியே அவரிடம், ‘இப்போ எங்கேயிருக்கிறீர்கள்’ என்றேன் தயக்கமாக. புகழ்பெற்ற பல்கலைக் கழகம் ஒன்றில் கணிதப் பேராசிரியராக பணிபுரிவதாகக் கூறினார்.
‘பிராக்டிஸுக்கு வந்திருக்கலாமே’ என்றேன் சம்பிரதாயமாக...
‘நல்லவேளை வரவில்லை’ என்று ஏனோ இன்று நினைத்துக் கொண்டேன்
Madurai
06/10/2015

'முழி' பெயர்ப்பு!
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள வழக்குரைஞர் நண்பர் ஒருவருக்கு பார் கவுன்ஸில் அளித்துள்ள ஆவணத் தொகுப்பினை ஆய்ந்து கொண்டிருந்தேன் அப்போது கண்ணில்பட்ட ‘Oh Central Government Oh Supreme Court’ என்ற வாசகத்தைப் படித்ததில் முதலில் ஒன்றும் புரிபடவில்லை.
முழுவதும் அந்த ஆவணத்தைப் படித்தால், குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே கூடிய சில வழக்குரைஞர்கள் எழுப்பிய கோஷங்களைக் குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய அறிக்கை அது.
அப்படியும் கொஞ்ச நேரம் பிடித்தது.
‘மத்திய அர’சே’ உச்ச நீதிமன்ற’மே’ என்பதின் ஆங்கில மொழிபெயர்ப்புதான் அது என்று புரிய.
‘கோர்ட் இங்கு சீரியஸாக நடந்து கொண்டிருக்கையில் என்னத்தை அங்கு படித்து விட்டு சிரித்துக் கொண்டிருக்கிறான்’ என்று நீதிபதி நினைத்திருப்பார்.
நீதிமன்றப் பதிவாளர் என்றால் எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.
நீதிபதி வேலை கூட அப்படித்தான்.
சில வருடங்களுக்கு முன்னர் விபத்து இழப்பீடு வழக்கு. மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டுமென்று தீர்ப்பினை படித்துக் கொண்டிருந்தேன்.
‘இறந்தவர் உலோகம் முதலான கடினப்பொருட்களுக்கான பட்டயப்படிப்பை படித்திருந்தார்’ என்ற வாசகம் என்னைக் குழப்பியது. ‘என்னடா இது, தென்காசியில் மெட்டாலர்ஜியெல்லாம் படிக்கிறார்களா?’ என்று நினைத்தேன். ஆவணங்களைப் பரிசீலித்த பின்னர்தான் புரிந்தது,
Diplomo in Hardware Technology!
விபத்தில் எலும்பு முறிவு ஏற்ப்படும் வழக்குகளீன் தீர்ப்புகள் அனைத்திலும் தவறாமல் ‘காயமடைந்தவர் ‘இயற்பியல் சிகிச்சை’ செய்த வகைக்கு உண்டான செலவு…..’ என்ற வாக்கியம் இடம் பெறும். எலும்பு முறிவுக்கும் பிஸிக்ஸுக்கும் ஏதும் சம்பந்தமில்லையே என்று நினைக்க வேண்டாம்.
இது Physiotherapy!
வழக்குரைஞர்களும் விதிவிலக்கல்ல...
இயேசு சிலுவையில் அறையப்படும் நாளுக்கு முந்தைய நாள் இரவு தனது சீடர்களுடன் உணவருந்திய சடங்கினை கிறிஸ்தவர்கள், தங்களது பிரார்த்தனையின் பொழுது பின் பற்றி வருகிறார்கள். சி எஸ் ஐ பிரிவினை சேர்ந்தவர்கள் எப்போது நடைபெற்றாலும் இந்த சடங்கினை ‘இராப்போஜனம்’ என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் ‘Holy Communion’
அவசரமாக பிராது எழுத முயன்ற, கிறிஸ்தவரல்லாத அந்த சீனியர் வக்கீலுக்கு ‘இராப்போஜனத்’தை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என்று புலப்படவில்லை. ‘The Defendant did not participate in ‘Night Meals’ என்று எளிதில் முடித்து விட்டார்.
அந்த சீனியருக்கே சீனியரான என் சீனியரின் கையில் அந்தப் பிராது வந்தது. ‘போன போடுறா அவனுக்கு’ என்று கூப்பிட்டு விளாசித் தள்ளிவிட்டார். டெல்லிக்கே ராஜாவானாலும் அம்மைக்கு பிள்ளைதானே...
கடந்த வாரம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மனுதாரரின் விபரம் அதிர்ச்சியாக இருந்தது.
Fr.Francis Xavier
Shareholder
St.Assisi Roman Catholic Church
‘அட, வெளிப்படையாவே கோவில் சொத்தை பங்கு வச்சு பிரிச்சுக்கிட்டாங்களா’ என்று நினைத்தேன். சம்பந்தப்பட்டவரிடம் கேட்டால், ‘பங்குத் தந்தை’யை கிளார்க் அப்படி அடித்து விட்டதாக கூறினார்.
என்ன ஒரு தீர்க்க தரிசனம்!

Thursday, 8 October 2015
மீறுதல்களும் கருணையும்
உயர் நீதிமன்றம்.
திடீரென சில கல்லூரி மாணவ, மாணவிகள் நீதிமன்றத்திற்குள் நுழைந்து தங்கள் தாய்மொழியைப் போற்றி கோஷங்களை எழுப்பினார்கள். ஆங்கில ஆதிக்கத்தை ஒழிப்போம் என்றார்கள், பாடல்களைப் பாடினார்கள், துண்டுப் பிரசுரங்களை வீசினார்கள்.
நீதிபதிக்கு வழக்கை நிறுத்தி விட்டு தனது அறைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒருவழியாக ஆர்ப்பாட்டக்கார்களை அப்புறப்படுத்தி ஒழுங்கு ஏற்ப்படுத்தப்பட்டது. மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி முன் பதினொன்பது பேர் நிறுத்தப்பட்டனர். நீதிபதி அவர்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாயில் அபராதத்தோடு விட்டு விடுவதாகக் கூறினார். சிலர் வருத்தம் தெரிவித்தார்கள்.
மற்றவர்கள் ‘எங்களுக்காக ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்ச்சிகள் கூட ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமா?. எங்கள் மொழி என்ன அவ்வளவு கேவலமா. நாட்டின் கவனத்தைக் கவரவே இவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. எங்களால் கொள்கை ரீதியில் வருத்தம் தெரிவிக்க முடியாது’ என்றனர். நீதிபதி அவர்களுக்கு வேறு வழியின்றி மூன்று மாத காலம் சிறைத் தண்டனை விதித்தார்.
நடந்தது பிப்ரவரி’4 1970ல் இடம் இங்கிலாந்து. தண்டிக்கப்பட்ட மாணவர்கள் வேல்ஸ் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள்.
அடுத்து நடந்தது முக்கிய திருப்பம்.
தண்டிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்தனர்.
அவர்கள் அதிஷ்டம், குயின்ஸ் பெஞ்ச் எனப்படும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி வேல்ஸ் மொழி, கலாச்சாரம் மீது பரிவு கொண்டவர். தன்னுடன் வெல்ஷ் மொழி அறிந்த நீதிபதி ஒருவரையும் மற்றொருவரையும் துணைக்கு வைத்து கொண்டு ஒரே வாரத்தில் வாதங்களைக் கேட்டு தீர்ப்பினைக் கூறினார்.
‘மொழிக்காக போராடுவதில் தவறில்லை. மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிமன்றத்திற்குள்ளா வந்து போராடுவது, இதற்கெல்லாம் தண்டனை மூன்று மாதமல்ல ஆறு மாதமே சரியானதாயிருக்கும், இனி போராட்டமென்று இங்கு வந்தால் தொலைத்து விடுவேன், என்றெல்லாம் கண்டித்தாலும் சரி, இதுவரை இருந்த ஒரு வார காலத்தோடு விடுகிறேன்’ என்று விடுதலை செய்தார்.
இங்கு போலவே நீதிபதியை பல்வேறு வார்த்தைகளில் திட்டி மொட்டைக் கடிதங்கள்.
ஆயினும் தனது இந்த தீர்ப்புக்காக மெத்த திருப்தியுற்றதற்காக தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நீதிபதி உலகின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவராக மதிக்கப்படும் லாட்ர் டென்னிங்!
கதை இத்துடன் முடியவில்லை.
மோரிஸ் எதிர் க்ரவுண் ஆஃபீஸ் (1970 1 All ER 1079) என்ற வழக்கில் லார்ட் டென்னிங் கூறியுள்ள கருத்துகளை நமது உச்ச நீதிமன்றம் சந்தீப் குமார் ((2011) 4 MLJ 1006 (SC)) என்ற வழக்கில் எடுத்தாண்டது. தொடர்ந்து நமது உயர்நீதிமன்றத்தின் இளம் வயதில் ஏதாவது குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டதை வைத்தே காவலர் பணி மறுக்கப்பட்டவர்களுக்கான மணிகண்டன், அலெக்ஸ் பொன்சீலன் வழக்கு உட்பட அனைத்து வழக்குகளிலும் இந்த வழக்கு பற்றிய குறிப்பினைக் காணலாம்.
எங்கோ என்றோ போராடிய வேல்ஸ் மாணவர்களின் செயல், தமிழகத்தில் சிலருக்கு காவலர் வேலை கிடைக்கச் செய்துள்ள அதிசயம்தான் ‘பட்டர்ஃப்ளை எஃபக்டோ?’
சிலருக்கு வேலை பெற்றுத் தந்தது மட்டுமல்ல இனி, சில சட்டக் கல்லூரி மாணவர்களின் படிப்பையும் காப்பாற்றப் போகிற லார்ட் டென்னிங்’கின் மனித நேயம் மிகுந்த வார்த்தைகள், ஏதோ தமிழில் மொழி பெயர்க்க முடியாது என்பதால் அல்ல. நேரமின்மையால் ஆங்கிலத்திலேயே:
They have already served a week in prison. I do not think it necessary to keep them inside it any longer. These young people are no ordinary criminals. There is no violence, dishonesty or vice in them. On the contrary, there was much that we should applaud. They wish to do all they can to preserve the Welsh language. Well may they be proud of it. It is the language of the bards - of the poets and the singers - more melodious by far than our rough English tongue. On high authority, it should be equal in Wales with English. They have done wrong- very wrong - in going to the extreme they did. But, that having been shown, I think we can, and should, show mercy on them. We should permit them to go back to their studies, to their parents and continue the good course which they have so wrongly disturbed.

Saturday, 3 October 2015
உனக்கு நீயே எதிரியாதல்
மதுரை வழக்குரைஞர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் மீதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்தமுறை ஏ.கே.இராமசாமி அவர்களிடமும் இந்த முறை தர்மராஜ் அவர்களிடமும் நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை கேட்டது.
பொதுவாக அந்தக் கேள்விகளின் தன்மையானது, ‘ஆம்’ என்று பதிலளித்தால் அந்தப் பதிலே அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளார்கள் என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும் வகையில் இருந்தது.
அவ்வகையான கேள்விகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 20(3)ல் அளிக்கப்பட்ட ‘குற்றம் சாட்டப்பட்ட எந்த நபரையும், தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது’ என்ற உரிமையை மீறுவதாகாதா? (Right against Self-incrimination)
‘இல்லை’ என்கிறது உச்ச நீதிமன்றம் தனது தில்லி ஜுடீசியல் அசோசியேசன் எதிர் ஸ்டேட் ஆஃப் குஜராத் (AIR 1991 SC 2176) என்ற வழக்கில்.
அதாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மற்ற குற்ற வழக்குகளோடு சம்பந்தப்படுத்த முடியாது, குற்றவியல் நடைமுறைச் சட்டமும் அதற்குப் பொருந்தாது என்றும் ‘எனவே நீதிமன்ற அவமதிப்பிற்காக வழக்கு தொடரப்படுபவரை பிரிவு 20(3)ல் குறிப்பிடப்படும் ‘குற்றம் சாட்டப்படுபவர்’ என்று கருத முடியாது’ என்றும் கூறியுள்ளது.
இருந்த போதிலும், இயற்கை நீதியில் அடிப்படையில் இது சரியாக இருக்குமா என்றால், இருக்கப் போவதில்லை என்பதுதான் என் பதிலாக இருக்க முடியும்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்ற குற்றவியல் அடிப்படைகளிலிருந்து வேறுபடுகிறது என்றாலும், முடிவில் இங்கும் சம்பந்தப்பட்டவரின் தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் உத்தரவை பிறப்பிக்க முடியும். அதையும் அவரிடம் இருந்து பெறப்பட்ட பதிலை வைத்தே பறிக்க முடியும்.
அவ்வாறு என்றால், பிரிவு 20(3) எந்த நோக்கத்திற்காக இயற்றப்பட்டுள்ளதோ, குற்றம் சாட்டப்படுபவர் மீது எவ்விதமான அதிகார துஷ்பிரயோகம் பிரயோகிக்கப்படுவதிலிருந்து அவரை காப்பாற்றுவதற்காக சிந்திக்கப்பட்டுள்ளதோ அதே காரணங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் இருக்காது என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
பிரிவு 20(3) அளிக்கும் பாதுகாப்பு நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையாக இல்லாதிருக்கலாம். ஆனால், அதன் நோக்கங்களை அறிந்து அதை அவருக்கு தாமாக அளிப்பது குற்றம் சாட்டுபவரின் கடமை!
நீதிமன்றத்திற்குள்ளான ஆர்ப்பாட்டங்கள்
ஏப்ரல்’1 2015.
காலை சரியாக மணி பத்து. தலைமை நீதிபதியின் மன்றம். நீதிபதிகள் அனைவரும் அமர்ந்த பின்னர் மற்றவர்களும் தங்கள் இருக்கையில் அமர்கின்றனர். முதல் வழக்கு அழைக்கப்படும் அதே நேரத்தில், பார்வையாளர்கள் வரிசையிலிருந்து ஒருவர் எழுகிறார். பதாகை ஒன்றை உயர்த்தியபடி ‘ நம் நாட்டின் மக்களாட்சி மாண்பினைக் காக்க இங்கு நான் எழுகிறேன். ஒருவரு ஒரு ஓட்டு’ என்று உரத்த குரலில் கத்தவும், காவலர்கள் பாய்ந்து வந்து அவரை மடக்கி வெளியே அழைத்துச் செல்கின்றனர்.
தலைமை நீதிபதி சுதாரித்துக் கொண்டு, ‘இன்றைக்கு விசாரிக்கப்படவுள்ள இன்ஸால்வன்ஸி வழக்குக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?’ என்று கிண்டலடிக்கவும், அனைவரும் சிரிக்க நீதிமன்றம் சகஜமாகியது.
ஆனால் அந்த அமைதி கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. சில நிமிடங்களில் வேறு ஒருவர் எழுந்து வேறு ஒரு முழக்கத்தை எழுப்பவும், அவரும் குண்டுக்கட்டாக தூக்கப்படுகிறார்.
தொடர்ந்து மற்றொருவர். இப்படியாக பெண்கள் உட்பட ஏழு நபர்கள். அதில் ஒருவர் தனது முழக்கத்தை பாட்டாகப் பாடியது இன்னமும் வேடிக்கை.
ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது வழக்கினை எதிர் நோக்கியுள்ளனர்.
நீதிபதிகளுக்கும் இது புது அனுபவமல்ல. ஏற்கனவே 2014ம் ஆண்டில் இதே 99rise இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு முழக்கத்தை எழுப்பியதற்கு கைது செய்யப்பட்டனர். மீண்டும் பிப்ரவரி 2015ல் மீண்டும் முழக்கங்கள். கைது.
இதெல்லாம் எங்கு?
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில்.
தேர்தலில் கட்டுக்கடங்காமல் பணம் செலவழிப்பதை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எதித்துதான் இந்தப் போராட்டங்கள்.
முதலிருமுறையும் போராட்டம் நடத்தியதை வீடியோ எடுத்து வெளியிட்டதை தடுக்கும் வண்ணம் மார்ச்’2015ல் நீதிமன்றத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டாலும் மூன்றாம் முறையும் பேனா கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டு விட்டது.
அமெரிக்க உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே அதன் நீதிமன்ற அறை வீடியோ எடுக்கப்பட்டது இந்த மூன்று முறைதான்.
முதலிரண்டு முறையும் கீழமை நீதிமன்றங்களில் சாதாரண கிரிமினல் வழக்குகள் தொடர்ந்து, ஒன்றிரண்டு நாட்களிலேயே விடுதலை செய்யப்பட்டாலும், இம்முறை நீதிபதிகளின் கோபம் உக்கிரமடைந்துள்ளதால் முழக்கமிட்டவர்கள் மீது கிரிமினல் கண்டெம்ட் வழக்கு தொடரலாமா என்று விவாதித்து வருகிறார்கள்.
போராட்டவாதிகளின் வழக்குரைஞரும் சாமான்யப்பட்டவர் இல்லை. நீதிமன்றத்திற்குள் முழக்கமிடக்கூடாது என்பது பேச்சுரிமையைப் பாதிப்பது இல்லையா என்ற ரீதியில் தாக்கல் செய்துள்ள எதிர்வாதவுரையை பாருங்களேன்.
Even as to a nonpublic forum, a restriction on speech must still be reasonable. A ban on ‘loud … language,’ which is entirely untethered to the need to maintain the order and decorum of the court, is unreasonable. It is not reasonable to prohibit loud language regardless of whether the loudness is necessary; regardless of whether the speech is disruptive; regardless of whether the speech is raucous; regardless of whether the volume of the speech is intended to communicate a message rather to interfere with official proceedings; regardless of the time of day; regardless of whether the loudness of the speech presents a clear and present danger of imminent violence; regardless of whether the speech is amplified; regardless of the location of the speaker within the forum; and regardless of the actual volume of the speech
அபார துணிச்சல்தான்...
Subscribe to:
Posts (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....
-
நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட நேரம் . வழக்குரைஞர் ஒருவர் என்னை அணுகி ‘தே...
-
‘அதனால்தான் என் கண்கள் சற்று சொருகியுள்ளது. மற்றபடி எனக்குப் பிரச்னையில்லை. ஆகவே, கடவுளுக்குப் படைக்கும் எதையும் எப்படி நான் எனக்குள் எடுத...
-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...