அப்போதுதான் பதினோராவது வகுப்பில் சேர்ந்திருந்தேன். சித்தப்பா அலுவலக காரியமாக டெல்லி வரை சென்றிருந்ததால், சித்தி வீட்டில் இருந்தேன். வாரம் ஒருமுறை சாவி கொடுக்க வேண்டிய சுவர்கடிகாரம் நின்று விட்டது. அதை எப்படி ஓட வைப்பது என்று எனக்கும் தெரியாது, சித்திக்கும் தெரியவில்லை. திரும்பி வந்து சில மாதங்களிலேயே சித்தப்பா இறந்து போன போது, ‘அந்த கடிகாரத்துக்கு எப்படி கீ கொடுப்பது என்று கூட எனக்குத் தெரியாதே’ என்று சித்தி அழுதார்கள்.
‘ஹி ஒன்லி பெய்ட் ஆல் த பில்ஸ்’ எதிர்பாராத விபத்தில் கணவனை இழந்த பின் இரு சிறு குழந்தைகளுடன் நிற்கதியாக நிற்கும் எட்னா ஸ்பால்டிங் (சாலி ஃபீல்ட்) ப்ளேஸஸ் இன் த ஹார்ட் (1984) படத்தில் அப்பாவியாகக் கேட்கும் பொழுது இந்த சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.
ஆனால், பரிணாம வளர்ச்சிப்படி நெருக்கடியான சூழ்நிலையில் தாய்மை குழந்தைகளுக்காக விழித்துக் கொள்வதையும் வியக்கத்தக்க வகையில் பிழைத்திருக்கும் ஆற்றலை (survival instinct) வெளிப்படுத்துவதையும் நிசத்திலேயே பலமுறை பார்த்து விட்டதால், அப்பொருளாதார நெருக்கடியிலும் எட்னா பருத்தி விவசாயத்தில் இறங்குவதும், சிக்கலிலிருந்து மீள்வதும் அதிசயமாகவல்லாமல் இயல்பானதாவே இருந்தது.
தற்செயலாக எட்னா’விற்கு உதவியாக வரும் ‘டானி க்ளோவர்’ ‘ஜான் மல்கோவிச்’ போன்ற பாத்திரங்கள் நிசத்தில் கடவுளின் ப்ரசன்னம் என்பதாக உணரப்படுகிறார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த படம் என்பதால் எட் ஹாரிஸ் உட்பட அனைவரையும் இளமையாகப் பார்ப்பது தனி அனுபவம்.
முதற்காட்சியில் எட்னா’வின் கணவர் இறந்து போவதைத் தவிர பின்னர் வேறு பெரிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதை. தெளிந்த நீரோடை போல முப்பதுகளின் மத்தியில் அமெரிக்க கிராமம் ஒன்றில் நிகழ்வதால் அக்கால காட்சியமைப்புகளே என்னைப் பெரிதும் கவர்வதாயிருந்தது.
கணவனின் பிரிவு, பொருளாதார நெருக்கடி, வெள்ளை இனவெறி என்பதற்கும் மத்தியிலும் நம்பிக்கை கீற்றோடு ஃபீல் குட் உணர்வுகளால் படம் நிறைவடைகிறது. இன்று நாடு நாடாக பறந்து கொண்டிருக்கும் சித்தியின் வாழ்க்கையைப் போலவே!
Showing posts with label Places in the Heart. Show all posts
Showing posts with label Places in the Heart. Show all posts
Thursday, 23 July 2015
Subscribe to:
Posts (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....
-
நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட நேரம் . வழக்குரைஞர் ஒருவர் என்னை அணுகி ‘தே...
-
‘அதனால்தான் என் கண்கள் சற்று சொருகியுள்ளது. மற்றபடி எனக்குப் பிரச்னையில்லை. ஆகவே, கடவுளுக்குப் படைக்கும் எதையும் எப்படி நான் எனக்குள் எடுத...
-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...

