Sunday, 20 September 2015
சி.வி.விக்னேஷ்வரன்
ஜான் மெக்கெயின். அமெரிக்க விமானப்படை வீரர். போர்க்கைதியாக வியாட்நாமில் சித்ரவதைகளை அனுபவித்தவர். அதன் காரணமாக அமெரிக்க மக்களால் மதிக்கப்பட்ட அரசியல்வாதி. 2008 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், மக்களாட்சி கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ஓபாமாவின் கவர்ச்சியின் முன்னே ஒன்றுமில்லாமல் போய்விடுவார் என்று பயந்த அவரது அலோசகர்கள் ‘சாரா பாலின்’ என்ற குடும்பத் தலைவியை, அலாஸ்காவிலிருந்து இழுத்து வந்து மெக்கெயினின் துணை அதிபராக களத்தில் இறக்கினர்.
அமெரிக்க நாட்டிற்கு அடுத்திருக்கும் நாடு கனடா என்பதைத் தவிர உலக அரசியல் பற்றி ஏதும் தெரியாத சாரா பாலினின் கவர்ச்சியை மட்டும் நம்பியது, மெக்கெயினுக்கு மேலும் தலைவலியாக தோல்வியைத் தழுவினார்.
தேர்தல் பிரசாரத்தின் பொழுது, சாரா பாலினுக்கு உலக அரசியலைப் பற்றி பாடமெடுக்க மெக்கெயினின் ஆலோசகர்கள் பட்ட பாடுகளும் அதில் அவர்கள் அடைந்த தோல்வியும், ‘கேம் சேஞ்ச்’ என்ற படமாக 2012ல் வெளிவந்தது. சாரா பாலினாக ஜூலியானா மூர் பிரமாதமாக நடித்திருப்பார். நடிப்பு மட்டுமல்லாது உருவ ஒற்றுமையும், உடல் மொழியும் படம் பார்த்த பிறகு நமக்கு எந்த புகைப்படத்தைப் பார்த்தாலும் இது சாராவா ஜூலியானாவா என்ற சந்தேகம் வந்து விடும்.
“Primary difference being Sarah Palin can't name a Supreme Court decision, whereas Barack Obama was a constitutional law professor” மெக்கெயினின் ஆலோசகரான ஸ்டீவ் படத்தில் வெறுப்பில் பேசும் இந்த வசனத்தைக் கேட்கையில் ஒரு வழக்குரைஞராக பெருமையாக உணர்ந்தேன்.
அதே மாதிரியான உணர்வு நேற்று இலங்கை வடக்கு மாகாண முதல் மந்திரியான திரு.சி.வி.விக்னேஷ்வரன் அவர்கள் கடந்த 09.11.14 அன்று பியூசிஎல் அழைப்பின் பெயரில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவுக்காக ‘பாதுகாப்பையும் இறைமையையும் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் எழுத்தாக்கத்தைப் படிக்கையில் ஏற்ப்பட்டது.
மெத்தப் படித்தவர்கள்தான் சிறந்த ஆட்சியாளார்களாவார்கள் என்பதில்லை. எனினும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவரும், அரசியலமைப்புச் சட்டத்தின் நுணுக்கத்தையும் முக்கியமாக மனித உரிமைகள் பற்றிய ஆழ்ந்த அறிவையும் தனது பரந்துபட்ட படிப்பினாலும் அனுபவத்தாலும் பெறக்கிடைத்த தமிழர் ஒருவர் இலங்கையில் வடக்கு மாகாண முதல்வராக மைய அரசு மற்றும் ராணுவத்தின் பல்வேறு முட்டுக் கட்டைகளையும் மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற நினைப்பே பெருமையாகவும் அதே சமயம் அம்மக்கள் மீது பொறாமையாகவும் இருக்கிறது.
பியுசிஎல் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த உரையில் உலகளாவிய அவரது சட்ட அறிவு மட்டுமின்றி, சிந்தனையும் நம்மைக் கவர்கிறது. அதைப் பற்றி பின்னர். முக்கியமாக National Security is an euphemism for Regime Security என்று அவர் நிறுவ முயல்வதும் அதற்கு மாற்றாக ‘Human Security, which is the type of security I cherish’ என்பதை முன் வைப்பதையும் சொல்லலாம்.
பார்வையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க பின்னர் தமிழிலும் அவர் உரையாற்றியுள்ளார். அனைவரும் முக்கியமாக சட்ட மாணவர்கள் படிக்க வேண்டிய உரை!
Besides law, he has taught me a new and interesting word in English ‘scofflaw’
மதுரை
15/12/14
Subscribe to:
Post Comments (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....

-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...
-
Luden was a fisherman. The Government has enrolled Luden under a Group Insurance Scheme through National Federation of Fishermen Co-ope...
-
‘இறந்து போகும் ஒவ்வொரு உறவினரும் நான் வாழ்வதற்கான காரணங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டே போகிறார்கள்’ சமீபத்தில் இறந்து போன சித்தப்பாவைப்...
No comments:
Post a Comment