Friday, 11 September 2015

தி ட்ரூ காஸ்ட் 2015

கிறிஸ்துமஸ் புதுவருடம் என்று இரு பண்டிகைகள் தொடர்ந்து வந்தாலும் புதுத் துணி என்னவோ பள்ளிப்பிராயம் முடியும் வரை ஒன்றுதான். ஏதோ ஒன்றிரண்டு தடவை புதுவருடத்திற்கு என்று தனியாக மேலும் ஒரு சட்டை கிடைத்திருக்கலாம்.

இப்போது சட்டை வேண்டுமென்று வீட்டில் கேட்டால், பையில் குறைந்தது நாலு சட்டை கூடவே இரண்டு டி-சர்டுகளும் இருக்கிறது. மூன்று வாங்கினால் இரண்டு இலவசமாம்.

இவ்வாறு புதிய புதிய டிசைன்களை மேலும் மேலும் குறைந்த விலைக்கு வேகவேகமாக விற்பதன் வணிக உத்தியை ‘பாஸ்ட் பேஷன்’ என்று அழைக்கிறார்கள். ஏறக்குறைய கடந்த இருபது ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வரும் இப்பொருளாதாரத்தின் பின்னணியில் இருக்கும் வேதனைகளை பல்வேறு ஊடகவியலாளர்களும் சமூகவியலாளர்களும் இணைந்து ‘ட்ரூ காஸ்ட்’ என்ற பெயரில் ஆவணப்படமாக்கியிருக்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னர் ‘ஐஐடியில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவது, மாண்டியில் கூலி கேட்டுப் போராடி மாண்ட கட்டிடத் தொழிலாளர்கள்தாம்’ என்று நான் கூறிய அதே கருத்துதான்.

தேவைக்கு ஒரு சட்டை வாங்கிய நாம் இன்று நான்கு சட்டை வாங்குவதற்குக் காரணம், வசதி கூடியுள்ளது என்பதை விட விலை குறைந்துள்ளது என்பதுதான் உண்மை என்கிறது படம்.

‘நீங்கள் அணியும் உடைகளில் எங்களது ரத்தம் இருக்கிறது’ என்று பங்களா தேச பெண் தொழிலாளி கூறுவது இதைப் படிக்கும் உங்களுக்கு வெற்றுக் கோஷமாகக் தோன்றாலாம். ஆனால் இப்படத்தைப் பார்க்கும் எவரையும் நாம் அணியும் நவீன ஆடைகள்தாம் இந்திய விவசாயிகளின் தற்கொலைகளிலிருந்து, பருத்தி விவசாயத்தை ஏதோ தொழிற்சாலை உற்பத்தி போல பூச்சிக் கொல்லிகளாலும், ரசாயண உரங்களாலும் மாற்றுவதன் விளைவாக அமெரிக்க விவசாயிக்கு ஏற்ப்பட்ட புற்று நோய் வரை காரணம் என்பதை எவ்வித கேள்வியும் கேட்க முடியாமல் நம்ப வைக்கிறார் இயக்குஞர்.

என் ஜி ஓக்களிடமும், வரையற்ற கார்ப்பரேட் எதிர்ப்பாளர்களிடமும் இதுதான் பிரச்னை. அவர்களது வாதத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று பட்டால் கூட அவர்கள் பேசி முடிக்கும் வரை தலையாட்டுவதைத் தவிர நமக்கு வேறு வழியிருக்காது.

அதுவும் இப்படத்தில் தோன்றும் நம் வந்தனா ஷிவா?

தேர்ந்த நடனக் கலைஞரைப் போல பேசும் கருத்திற்கு இசைந்து அவரது கண்களும் கைகளும் அபிநயம் பிடிக்கும் அழகு அவரது வாதத்திற்கு பலமடங்கு பலம் கொடுக்கிறது. அவர் தேர்ந்தெடுக்கும் ஆங்கில வார்த்தைகளும் வாக்கியங்களில் அவற்றை பொருத்தமாக அவர் கோர்ப்பதும் அழகுதான்.

எவ்வளவு முயன்றும், படத்தைப் பற்றிய எனது இந்த அறிமுகம் வறட்டுத்தனமாகவே செல்கிறது. ஆனால், படம் அப்படியல்ல. ஏறக்குறைய ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் பார்க்கும் அதே சுவராசியத்துடன் பார்க்கும்படி காட்சிகளும், இசையும், ஒளிப்பதிவும் அப்புறம் ஏதோ சொல்வார்களே ‘மேக்கிங்’ அதுவும் இருக்கிறது.

‘அமெரிக்காவில் எதையும் விமர்சிக்கலாம். ஆனால் முதலாளித்துவத்தை முடியாது’ என்று மார்க்ஸீய பொருளாதாரவாதியான ரிச்சர்ட் உல்ஃப் படத்தில் கூறினாலும், அமெரிக்க சந்தைப் பொருளாதாரம் வங்க தேச தொழிலாளர்களையும் இந்திய விவசாயிகளையும் சுரண்டுவதை விமர்சிக்கும் படம் தயாரிக்கப்படுகிறது.

இங்கு பார்க்கக் கூட இயலுவதில்லை.

Wednesday, 9 September 2015

சாய்பாபாவும் இராமரின் மோதிரமும்

கடந்த மாதம் ஏதோவொரு தொலைக்காட்சியில், புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவைப் பற்றிய ஆவணபடம் ஒன்றினைப் பார்த்தேன். படத்தின் இறுதியில் பொது நிகழ்ச்சி ஒன்றில் சாய்பாபா, தனது வாயிலிருந்து பெரிய பச்சைக்கல் பதித்த மோதிரமொன்றினை எடுத்துக் காட்டி, ‘திருமணத்தின் பொழுது ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம்’ என்று தெரிவித்தார். கூட்டம் வியப்பிலாழ மோதிரத்தினை அவரது முன்னே இருந்த மேசையில் வைத்தார்.

ஆவணப்படத்தில் வர்ணனை வழங்கியவர், ‘அது பின்னர் மறைந்துவிடும்’ என்று கூற தொலைக்காட்சித் திரை முழுவதுமாக மங்க மோதிரமும் மறைந்து போனது.

இவ்வாறாக சாய்பாபா புராண காலத்து நகைகளை நம் முன் கொணர்வது பற்றிய விபரங்கள் அவர்களது வலைத்தளத்திலும் கண்ணுற்றேன்.

-oOo-

ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம் என்றால் அரிய பழம் பொருள் (Antique)  ஆயிற்றே. அரசுக்கு தெரிவிக்காமல் அதனை வைத்திருக்கலாமா என்ற இயல்பான சந்தேகம் எழுந்தது.

1958ம் வருடம் இயற்றப்பட்ட ‘The Ancient Monument and Archeological Sites and Remains Act’ என்ற புராதான சின்னங்களைப் பற்றிய சட்டத்தில் பழம்பொருட்கள் பற்றியும் கூறப்படுகிறது. ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரமென்றால், இந்த சட்டத்தில் பழம்பொருள் (antiquity) என்று விளக்கப்படும் பதத்திற்குள் வரும். ஆயினும், மத்திய அரசாங்கம் குறிப்பிட்ட ஏதாவது பழம்பொருளானது ஒரிடத்திலிந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படக்கூடாது என்று அறிவித்து அந்த உத்தரவு மீறப்பட்டால் மட்டுமே குற்றமாகும்.

எனவே சாய் பாபா வெறுமே ராமரின் மோதிரத்தினை வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை என்றுதான் தோன்றுகிறது

1972ம் ஆண்டில், ‘The Antiquities and Art Treasures Act’ என்று பழம்பொருட்கள் மற்றும் கலைச்செல்வங்களுக்காக தனியே ஒரு சட்டமியற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவுகளின்படி பழம்பொருட்களை ஏற்றுமதி செய்தல், விற்றல் பற்றிய பல கட்டுப்பாடுகள் உண்டு. முக்கியமாக பழம்பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை மத்திய அரசிடம் தெரிவித்து அதனைப் பற்றிய விபரங்களை பதிய (register) வேண்டும் என்ற கடமை.

ஆனால் மத்திய அரசு எந்த எந்த வகையான பழம்பொருட்களை பதிய வேண்டும் என்று அறிவிக்கிறதோ அவற்றை பதிந்தால் போதுமானது.

1976ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள GSR 280(E) என்ற அறிக்கையில் ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள்’ பதிவு செய்யப்பட வேண்டிய பழம்பொருட்கள் பட்டியலில் வந்தாலும், 1980ம் வருடம் மத்திய அரசு வெளியிட்ட S.0. 397(E) என்ற திருத்தப்பட்ட பட்டியலில் நகைகள் விடப்பட்டுள்ளது. எனவே 1980ம் ஆண்டிலிருந்து பதிய வேண்டிய பிரச்னையும் இல்லை.

மதுரை
18.04.08

பாம்பு விஷ பிரசாதம்!

‘அதனால்தான் என் கண்கள் சற்று சொருகியுள்ளது. மற்றபடி எனக்குப் பிரச்னையில்லை. ஆகவே, கடவுளுக்குப் படைக்கும் எதையும் எப்படி நான் எனக்குள் எடுத்துக் கொள்ளாமல் படைக்க முடியும்? நெடுங்காலமாக நஞ்சு எனக்கு நல்ல விதமாகவே இருந்து வருகிறது’

‘பாம்பின் நஞ்சு (Venom) சிறு அளவில் உட்கொண்டால் மிகவும் போதையூட்டக் கூடியது. அளவுக்கு மிஞ்சும் எதுவும் உங்களைக் கொல்லக் கூடியது’

ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ‘ஈஷா யோக மையத்தில் 2011ம் வருடம் நடந்த ஆலயப் பிரதிஷ்டை நிகழ்ச்சியில், பாலுடன் ராஜநாகத்தின் (King Cobra) நஞ்சினையும் சிறிது கலந்து அதை சிவலிங்கத்துக்கு படைக்கும் முன் தானும் கொஞ்சம் அருந்தியதைப் பார்த்து கேள்வி எழுப்பிய பக்தர்களுக்கு அளித்த பதிலில்தான் சத்குரு இவ்வாறு கூறுகிறார்.

விரிவான செய்தி ஈஷா மையத்தின் இணைய தளத்தில் சலனப் படத்துடன் உள்ளது.

ஆனால், சத்குருவின் இந்தச் செயல் வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம்’ 1972ன் கீழ் குற்றமல்லவா?

பிரிவு 12(d)ன் படி பாம்பின் விஷத்தை எடுக்க அரசின் முன் அனுமதியும் தலைமை வன உயிரின காப்பாளரின் அனுமதியும் தேவை, அதுவும் உயிர் காக்கும் மருந்து தயாரிப்பதற்கு மட்டுமே அளிக்கப்படும்.

இச்சட்டத்தின் பிற பிரிவுகள் சிலவும் உரிமம் இன்றி பாம்பு விஷத்தைக் கையாளுவதை தடுக்கிறது.

சத்குருவிற்கு இவ்வாறு பாம்பு நஞ்சை எடுப்பதற்கும், அதை தானே அருந்துவதற்கும் உரிமம் அல்லது அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று தகவல் அறியும் சட்டத்தில் கேட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை.

பாம்பு விஷ முறிவிற்கான மருந்து வேகமாக குறைந்து வருவதால் மரணங்கள் நிகழ்வது அதிகமாகலாம் என்று இன்று பிபிசி இணையதளம் கூறும் செய்தியால்…

இனி யாராவது கேட்கலாம்.

Monday, 7 September 2015

அரபு மனிதாபிமானம்?

ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னர் அதுவும் செய்தித்தாளின் ஏதோ ஒரு மூலையில் படித்தது. சிறிய சம்பவம்தான், ஆனாலும் இரு நாட்களாக உலகின் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் படம் அதை மீண்டும் நினைவூட்டியது.

அரபு நாடு ஒன்றில் வேலை பார்த்து வந்த கேரள வாலிபர் திருமணத்திற்காக இந்தியா வந்திருந்தார். திருமணமாகி, விடுமுறையும் முடிந்து வேலைக்குத் திரும்ப வேண்டும். அப்போது இன்று போல இணையும் கிடையாது. தொலைபேசியும் அதீத கட்டணம்.

விமானம் ஏறினால் அடுத்த இரு ஆண்டுகளுக்கு திரும்ப முடியாது.

வழியனுப்ப வந்த மனைவிக்கும் துயரம். தாங்கவொண்ணா மன எழுச்சியில் இருவரும் நிற்பது திருவனந்தபுரம் பேருந்து நிலையம் என்றும் பாராமல் கட்டியணைத்து முத்தமிட்டனர். இவர்களது செயலின் வேதனை புரியாத மற்ற பயணிகள் காவலரிடம் புகார் செய்ய இருவரும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தம்பதிகளை விசாரித்த காவலர்கள் அவர்களை வெறுமே எச்சரித்து அனுப்பினாலும், இருவரும் சென்ற இடம் விமான நிலையம் அல்ல.
நேராக ஒரு லாட்ஜுக்கு சென்று, அங்கே தற்கொலை செய்து கொண்டனர்.

-oOo-

அவ்வப்போது, மத்திய கிழக்கு நாடுகளில் வேலை நிமித்தமாக இளம் வயதிலேயே குடும்பங்களைப் பிரிந்து வருடக்கணக்கில் வாழ நேரிடும் தொழிலாளர்களைப் பற்றி படிக்கையில் எல்லாம் இந்த சம்பவம் நினைவுக்கு வரும்.

தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் அனுமதி அளிக்காமல், அவர்களது உழைப்பைச் சுரண்டி மாட மாளிகைகளைக் கட்டி வாழ்வதிலும் அதில் பெருமைப்படுவதிலும் என்ன நிம்மதி இருக்க முடியும் என்று அரபு நாட்டு ட்ரில்லியனர்கள் மீதும் கோபமும் வரும்.

அதி தீவிரமாக பின்பற்றுவதாக இவர்கள் கூறிக் கொள்ளும் இஸ்லாம் மதம் தொழிலாள தம்பதிகளை மாதக்கணக்கில் பிரித்துப் போடுவதற்கு அனுமதிக்கிறதா என்ற கேள்வியும் இறுதியில் எழும்.
மத்திய கிழக்கு அரசியல் நிலவரம் பற்றி முழுமையாக அறிந்ததில்லை என்றாலும், பாலஸ்தீனம் தவிர பிற நாட்டு அகதிகளை, அவர்கள் முஸ்லீமாக இருந்தாலுமே ஏற்றுக் கொள்வதில்லை என்றே தெரிகிறது.

ஐரோப்பியர்களுக்கு பின் மன ரீதியில் அழுத்தம் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

மதுரை
05/09/15

இராமலிங்க விலாசம்

இராமநாதபுரத்திலுள்ள நண்பர் வீட்டிற்கு பலமுறை சென்றிருந்தாலும், அருகிலுள்ள அரண்மனைக்கு சென்று பார்த்ததில்லை.

இன்று நண்பருடைய தந்தையாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பொழுது கிடைத்த நேரத்தில் அரண்மனையில் அமைந்துள்ள ‘இராமலிங்க விலாசம்’ என்ற பெயரிலமைந்ததும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதுமான மாளிகைக்கு சென்றோம்.

தரை மற்றும் இரு தளங்களில் அமைந்த மண்டபங்களின் சுவர்கள் முழுவதும் அழகிய ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. எங்கள் ஆர்வத்தில் உற்சாகமடைந்த தொல்லியல் துறை அலுவலர் அரசரின் அந்தப்புறமான இரண்டாவது தளத்திற்கு அழைத்துச் சென்று, நாலாபுறமும் வரையப்பட்டிருந்த சென்ஸுவல் ஓவியங்களை விளக்க ஆரம்பித்து விட்டார்.

ஜாக்ஸன் துரை கட்டபொம்மனை சந்தித்து பின் சுரங்கப்பாதை வழியாக கட்டபொம்மன் தப்பித்தது, இராமலிங்க விலாசத்தில்தானாம்.

வெள்ளிக்கிழமை வார விடுமுறை. இராமநாதபுரம் சின்ன ஊர்தான். அரண்மனையைத் தேடி அலையத் தேவையிருக்காது. மற்ற வேலைகளுக்கிடையில் அரை மணி நேரத்தில் பார்த்து திரும்பி விடலாம்.

மதுரை

06/09/15

Thursday, 3 September 2015

பெஸ்ஸீ 2015

கி.ராஜநாராயணன், கோபல்லபுரம் நாவலில் ஓட்டப்பிடாரத்திலிருந்து தாலுகா தலைமையகம் ஏன் கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டது என்பதை சுவராசியமாகக் கூறியிருப்பார்.

ஜமாபந்தி. கலெக்டர் உட்பட அனைவரும் வந்து விட்டாலும், தாசில்தாரைக் காணோம். வியர்க்க விறுவிறுக்க பின்னர் வந்து சேரும் தாசில்தாரைப் பார்த்து கலெக்டர் கடும் கோபமாக, ‘ஜமாபந்தியன்று ஊரிலிருக்காமல் எங்கு போனீர்’ என்பதற்கு. தாசில்தாரோ, ‘எங்கும் போகவில்லை ஐயா. கோவில்பட்டியில் வீடு. அங்கிருந்து வர நேரமாகிவிட்டது’. என்பார் அப்பாவியாக.

கலெக்டரோ, ‘அது இன்னமும் மோசம். தாசில்தார் தாலுகா தலைநகரில் இல்லாமல் வேறு ஊரில் எப்படி வசிக்கப் போயிற்று’ என்று விளக்கம் கேட்பார். தாசில்தார், ‘ஐயா, நான் தாழ்ந்த சாதி. எனக்கு ஓட்டப்பிடாரத்தில் யாரும் வீடு கொடுக்க மாட்டார்கள்’ என்றவுடன் கலெக்டர், ‘தாலுகா தாசில்தாருக்கு வீடு கொடுக்காத ஊரில் தலைமையகமா, மாத்து உடனே தாலுகா ஆபீசை கோவில்பட்டிக்கு’ என்று உத்தரவிட்டாராம்.

அந்தக் கலெக்டர் மணியாச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட தூத்துக்குடி சப் கலெக்டர் ஆஷ் என்று யாரோ ஒருவர் அவரது முகநூலில் சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவை தங்களது கணீரென்ற பாடல்களால் கட்டிப் போட்ட ‘மா ரெய்னி’யும் பெஸ்ஸி ஸ்மித்’தும் அவர்களும் அவரவர் குழுவினரும் பயணம் செய்வதற்காக, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும் விஞ்சும் வகையில் பிரமாண்ட வசதிகளோடு சொந்தமாக ரயில் பெட்டிகளையே வைத்திருந்தாரக்ள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் வெளிப்படுத்த விரும்பிய ஆடம்பரம் மட்டுமல்ல.

மாறாக, கறுப்பின பெண்கள், அதுவும் இனவெறி கொடி கட்டிப் பறந்த தென்மாகாணங்களைச் சேர்ந்தவர்கள், சாலைகளில் பயணம் செய்வதால் சந்திக்க நேரிடும் நிறவெறி சீண்டல்களைத் தவிர்க்கவும் பிற நகரங்களில் தங்குவதற்கு விடுதிகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களாலும்தான் என்ற காரணங்கள் பெஸ்ஸியின் வாழ்க்கைச் சரிதப் படமான இப்படத்தில் கிடைக்காது.

ஆனால், பெஸ்ஸி ஒன்றும் நிறவெறி தாக்குதலுக்கு பயந்தவரல்ல. யாரிடமும் அவருக்கு பயமில்லை என்றாலும், பாடல் நிகழ்ச்சியில் கலாட்டா செய்ய வரும் கூ க்ளக்ஸ் க்ளான் இயக்கத்தவரைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் பயந்து கிடக்க தைரியமாகச் சென்று விரட்டியடித்தவர்தான். க்ளான்’காரர்கள்தான் என்றில்லாமல் அவரைச் சீண்டும் அனைத்து ஆண்களும் அவரிடம் உதைபடுகிறார்கள்.

அந்த தைரியத்தையும் தாண்டி பெஸ்ஸியின் வாழ்க்கையில் சிறு வயது முதலே துன்பமும் இன்பத்தோடு தொடர்கிறது. நாற்பத்து மூன்று வயதிலேயே சாலை விபத்தில் முடிந்து போன பெஸ்ஸியின் குறுகிய வாழ்க்கை எங்கும் பரவிக்கிடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களும், ஏற்றத் தாழ்வுகளும் அருமையான திரைக்கதைக்கான வடிவம்தான் என்றாலும் அதற்காக இருபது வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இங்கு எப்படி கொல்லங்குடி கருப்பாயி’யுடன் துணைக்கு பாடிய பரவை முனியம்மா பின்னர் தனியாக பயணித்து அவரையும் விஞ்சினாரோ அதே போன்று புகழில் உச்சியிலிருந்த மற்றொரு ப்ளூஸ் ரக பாடகியான மா ரெய்னி’யிடம் வாய்ப்பு கேட்டு துணையாகப் பாடிய பெஸ்ஸி பின்னர் தனியே சென்று 'ப்ளூஸ் பேரரசி’ என்று வர்ணிக்கப்பட்டார்.

ப்ளூஸ் ஆப்ரிக்க அமெரிக்க இசையைக் கலந்து பொதுவாக காதல் ஏக்கத்தில் பாடப்படும் பாடல்கள். பெஸ்ஸி படம் பார்த்ததிலிருந்து நானும் ப்ளூஸ் ரசிகனாகி விட்டேன். இரு நாட்களாக ப்ளூஸ்’தான்.

கே.ஆர்.விஜயா கூட சொந்தமாக விமானம் வைத்திருந்தார் என்று முன்பு கூறுவார்கள். பறந்தாரா என்று தெரியவில்லை...

LEONARDO DiCAPRIO

In all these days, I have been expressing my opinion on the films I see, there is one actor, I have avoided consciously. Probably I fear that with my limited vocabulary and restrictive language skills, I may not do justice in drawing a perfect picture of the kind of passions this actor has generated in me; or that I have not seen any picture of him after I start to write here except one, which I could mention with trepidation. The innocuous posters were the culprits; made me to believe ‘The Wolf of Wall Street’ would something about the manipulations of stock market; I was in for a shock when it turned out to be true story of a scheming stock broker with his life full of debauchery and sexual orgy in graphic details, surely not a film to be enjoyed with family.
Leonardo DiCaprio!
Just forty years; but the wide spectrum of roles had he taken upon his shoulders already will make one wonder, how far he would go further in future. What is truly amazing is this baby faced or can I say chocolate hero actor succeeded in convincing us even while playing as septuagenarian J.Edgar!
I read somewhere that after the audition for Titanic, Kate Winslet told James Cameron that she would not mind, if not selected but Leonardo not to be dropped at any cost!
Last Sunday, I ticked one more film in the list of DiCaprio films; The Man in the Iron Mask. It is an interesting story woven with the fictional characters of Alexander Dumas with that of real historical figures and a lot of creative liberties. Leonardo is at ease as the role is not much challenging till his talents are put to real test, when the look-alike imposter finds himself in the throne of King Louis XIV of France. The would be king of Hollywood is so convincing in looking unconvincing as the King.
This historical drama is for the whole family…
Madurai
03/09/2014

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....